நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவுடனான மலேசியாவின் உறவு நன்றாக உள்ளது: அன்வார் 

பெர்லின்:

சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் நன்றாக இருப்பதாகவும், எந்தவொரு தீவிரமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும் மலேசியா ஜெர்மனிக்கு உறுதியளித்துள்ளது.

மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், அதன் மக்கள் ஒத்துழைப்பால் பலனடைவதை உறுதி செய்வதற்காக பல நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசியா மற்றும் பிராந்தியத்தில் என்ன நடக்கின்றது என்பது உட்பட உங்களின் நேர்மை, புரிதலால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, பிராந்திய இயக்கவியலில் அதன் தாக்கத்தை மலேசியா ஒப்புக்கொண்டாலும், சீனாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பும் அதே நேரத்தில் அதன் சொந்த இறையாண்மை மற்றும் நலன்களைப் பாதுகாப்பதும் முக்கியம் என்று அன்வார் கூறினார்.

உலகளவில் மலேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக சீனா இருப்பதாகவும், இந்த ஆண்டு தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 50-ஆவது ஆண்டு விழாவை இரு நாடுகளும் கொண்டாடுவதாகவும், இது தங்களுக்கு ஒரு வரலாற்று சாதனையாகும் என்றும் ஸ்கோல்ஸுடனான இருதரப்பு சந்திப்பின் போது அன்வார் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உட்பட, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிலிருந்து எழும் எந்தவொரு சவால்களையும் சமாளிக்க ஆக்கபூர்வமான ஈடுபாடின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

உக்ரைன் நெருக்கடி குறித்து, ரஷ்யா அங்கு தனது ஆக்கிரமிப்பை நிறுத்தி, மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் கூறினார்.

இது வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் முடிவுகள் ஆசியா வரை கூட உணரப்படலாம் என்று அவர் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset