நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர் இன்னும் ஐஜேஎன்னில் இருக்கிறார்: விரைவில் குணமடைவார் என நம்புகிறார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஜனவரி மாதம் ஏற்பட்ட நோய்த் தொற்றுக்காக கோலாலம்பூரில் உள்ள ஐஜேஎன்னில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐஜேஎன்னில் உள்ள மருத்துவர்கள், தாதியர்கள்,  ஊழியர்களின் பிரார்த்தனை, விடாமுயற்சியின் காரணமாக எனது உடல்நிலை மேம்பட்டு வருகிறது என்று 98 வயதான மகாதீர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன்.

ஜனவரி 26 அன்று அனுமதிக்கப்பட்ட மகாதீர், 

தனக்கும் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல்நலம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset