நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்களில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு: ஸடீவன் சிம் கவலை 

ஜார்ஜ் டவுன்:

கடந்த பத்தாண்டுகளில் தொழிலாளர்களில் ஏறக்குறைய 10% சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கவலை தெரிவித்துள்ளார்.

சொக்சோ மேற்கொண்ட சுகாதாரத் சோதனைகள் வாயிலாக,

கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் கண்டறியப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 19.9% ஆக உயர்ந்துள்ளது. இது 2013 இல் வெறும் 9% ஆக இருந்தது.

வேலையில் உற்பத்தித்திறனை பாதிப்பு, குறைந்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுப்பதைத் தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சொக்சோ அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது.

சொக்சோ கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான சிகிச்சைக்காக 300 மில்லியன் ரிங்கிட்டு மேல் செலவிட்டது.

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் விகிதத்தை குறைப்பதற்கான வழிகளை  அடையாளம் காண வேண்டும்.

அதனால் சொக்சோ தற்போது நாடு தழுவிய இலவச சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறது.

அத்துடன் நல்ல உணவுப் பழக்கம் குறித்தும் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கல்வி கற்பித்தல் நடவடிக்கையும் அடங்கும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset