நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த வாரம் ஆரம்பக் கட்ட உதவிதொகை வழங்கப்படும்: அஸ்மான் அட்னான் 

ஜாசின்:

 8,903 பள்ளிகளில் புதியதாகப் பதிவு செய்துள்ள 447,982 முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த வாரம் தொடங்கி ஆரம்பக் கட்ட உதவிதொகை பெறவுள்ளனர். 

இதற்காக 67 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார். 

2024 பட்ஜெட்டில் குறிப்பாக ஆரம்பக் கட்ட உதவிதொகைக்காக ஒதுக்கப்பட்ட 788.13 மில்லியன் ரிங்கிட்டின் ஒரு பகுதிதான் இந்தத் தொகை என்று அவர் குறிப்பிட்டார். 

பள்ளியில் மாணவர்களின் தரவு இருப்பதால் இந்த ஆரம்பக்கட்ட உதவி தொகையைப் பெறுவதற்கு பெற்றோர்கள் எந்த விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

788.13 மில்லியன் ஒதுக்கீடு 5.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயனளிக்கும் என்று கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், முஸ்லீம் அல்லாத மாணவர்கள் உண்பதற்கு ரமலான் மாதம் முழுவதும் வழக்கம் போல் இடைநிலைப்பள்ளிகளில் சிற்றூண்டிசாலைகள்  செயல்படும் என்றும் அஸ்மான் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset