நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய காருக்காக பூஜை பொருட்களை வழங்கிய கார் விற்பனையாளருக்கு பாராட்டு

கூலிம்:

கூலிமில் உள்ள புரோட்டான் விற்பனையாளரான நசிரா ஹசன், தனது வாடிக்கையாளருக்கு புதிய காரை ஆசீர்வதிப்பதற்காக பூஜை பொருட்களை தயார் செய்யும் சிந்தனைமிக்க செயலுக்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விற்பனையாளரான நஜிரா, தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் தனது செயல்கள் அமைந்துள்ளாதாக கூறினார்.

தனது சீன வாடிக்கையாளர்களுக்கு நல்வாழ்த்துக்காக அன்னாசிப்பழத்தையும் இதர பொருட்களையும் வழங்குவேன்.

இந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு தட்டில் தேங்காய், எலும்பிச்சை பழம், பூக்கள் ஆகியவை வழங்குவேன்.

என் வாழ்க்கையில் வழிகாட்டும் கொள்கை பலதரப்பட்ட மதத்தினரை மதித்து இதைச் செய்தேன். 

எங்கள் பன்முக கலாச்சார சமூகத்தில் இது சரியானது என்று உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.

நசிரா ஹசன் இச்செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தள பயனர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset