நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர், எலன் மஸ்க் தொடர்புடைய  முதலீட்டுத் திட்டம் போலியானது

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் மகாதீர், கோடீஸ்வரர் எலன் மஸ்க் தொடர்புடைய முதலீட்டு திட்டம் போலியானது.

இதனை மைசெக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கோடீஸ்வரர் எலன் மஸ்க் வறுமைக்கு எதிரான முதலீட்டுத் திட்டத்தைப தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு துன் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக பெர்னாமா செய்தியில் இது வெளியானதாக அவ்வீடியோவில் கூறப்படுகிறது.

உண்மையில் பெர்னாமா  செய்தி வாசிப்பாளரும் எலன் மஸ்க்கின் ஆடியோவும் உதடு அசைவுகளும் பொருந்தவில்லை என்பது மேலோட்டமான சோதனையில் கண்டறியப்பட்டது.

ஆனால் அது மகாதீரின் வீடியோ கிளிப்போடு மிகவும் நெருக்கமாக பொருந்தியது.

ஆகவே இதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset