நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் அரசு ஊழியர்களுக்கான வசதியான நேரங்கள் குறித்து விவாதிக்கப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

பொதுச் சேவைத் துறையில் பெண்கள் தங்களுடைய குடும்பத்தை சிறப்பாகக் கவனித்துக் கொள்வதற்கு வசதியான நேரங்கள் அல்லது குறுகிய வேலை நேரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

வசதியான தன்மை வெவ்வேறு ஊதிய விகிதங்களை உள்ளடக்கியதாக உள்ளன என்று அவர் கூறினார்.

உதாரணமாக, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கமான வேலை நேரத்திற்குப் பதிலாக, அவர்கள் நான்கு மணிநேரம் வேலை செய்யலாம்.

இதற்கான ஊதிய விகிதம் குறைவாக இருக்கலாம்.

ஆனால், வீட்டில் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

புதிய அரசு துறை சம்பளத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வின் ஒரு பகுதியாக இது அடங்கும்.

இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், பொது சேவைகளின் இயக்குநர் விவாதிக்க வேண்டும்.

சற்றே குறைந்த சம்பளத்துடன் கூட வசதியான நேரம் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset