நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழுக்கு மகுடம் சூடி அழகு பார்க்கும் மலேசியத் தமிழர்கள்: கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சி

கோலாலம்பூர்:

தமிழுக்கு மகுடம் சூடி அழகு பார்க்கும் 
மலேசியத் தமிழர்கள் எனது நன்றி என்று கவிப்பேரரசு வைரமுத்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மகா கவிதை நூல் எழுத ஆரம்பித்த போது எனக்குள் பல அச்சங்கள் எழுந்தன.

இந்த நூலை வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா, கவிஞர்கள் குழுவினர் என்ன சொல்வார்கள், கவிதையில் அறிவியலை புகுத்த முடியுமா என்ற கேள்விகள் எழுந்தது. பல நாட்கள் நான் தூக்கத்தை இழந்து நின்றேன்.

ஆனால் இன்று மலேசியாவின் கல்விமான்கள், தமிழ் அறிஞர்களின் வாழ்த்துரையோடும் மதிப்புரையோடும் மகா கவிதையை பெருந்தமிழ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதும்

இந்த விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இருவருக்கும் என் நன்றி. 

இந்த விருதை நான் பெரிதும் மதிக்கிறேன். பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம். 

ஆனால் இது என் ஒரு தலைக்கு மட்டுமல்ல, ஒரு தமிழ் தலைமுறையின் ஒவ்வொரு தலைக்கும் சூட்டப்படுவது என்றே கருதுகிறேன். 

மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழில் செய்யும் ஒவ்வொரு புரட்சிக்கும் சாதனைக்கும் அனைத்துலக ரீதியில் இருந்து அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

இது அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் இருக்கும்.

குறிப்பாக இந்த விழா கவிப்பேரரசுக்கு மகுடம் சூடும் விழா அல்ல. 

மாறாக தமிழுக்கு மகுடம் சூட்டி மலேசிய தமிழர்கள் அழகு பார்த்துள்ளனர்.

இதற்கு எனது நன்றிகள் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.

மகா கவிதை நூல் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்.

இதுவே எனது விருப்பம் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset