நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ் சேவையை மஇகா தொடர்ந்து அங்கீகரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

கவிப்பேரரசு வைரமுத்து தமிழுக்கு ஆற்றிய சேவையை மஇகா தொடர்ந்து அங்கீகரிக்கும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், கவிப்பேரரசு வைரமுத்துக்கு மலேசியாவில் விருது வழங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார்.

இதற்கு ஒரு சில எதிர்ப்புகள் வந்தாலும் தமிழை முன்னிறுத்தியதால் அவர் இதில் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகள்.

கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் தமிழ் துறையில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து.

அவர் எழுதும் புத்தகங்களில் பல கருத்துகளை முன்வைக்கிறார்.

இக் கருத்துகள் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்வோம். பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்போம்.

இதில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.

அவ்வகையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை நூல் மிகவும் சிறந்த நூல். அனைவரும் அதைப் படிக்க வேண்டும்.

குறிப்பாக வைரமுத்துவின் தமிழுக்கு ஆற்றிய சேவையை  மஇகா தொடர்ந்து அங்கீகரிக்கும்.

இதன் அடிப்படையில் எம்ஐஇடியின் தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் பெயரில் முன்னெடுக்கப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset