நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல் தொடர்புச் சட்டத்தின் மறுஆய்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது: ஃபஹ்மி தகவல்

பெட்டாலிங் ஜெயா: 

1998-ஆம் ஆண்டு தகவல் தொடர் பல்லூடகச் சட்டத்தைத் தகவல் தொடர்பு அமைச்சகம் மறுஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம், குற்றம் புரிபவர்களுக்கு அதிக தண்டனைகளைக் காணும் என்று ஃபஹ்மி தெரிவித்தார். 

இந்த மறுஆய்வு பயனர்களின் சேவை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

தொழில்நுட்பங்கள், அபராதங்கள் போன்ற பல அம்சங்களையும் மறுஆய்வு செய்யவுள்ளது. 

உதாரணமாக,சேவை வழங்குநர்கள் தொலைத்தொடர்பு மூலம் சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்துத் தங்கள் தரப்புக்குப் புகார்கள் கிடைத்துள்ளன என்றும் அதனைத் தீர்க்கும் நடவடிக்கையில் தற்போது செயல்பட்டு வருவதாகவும் புத்ராஜெயாவிலுள்ள தகவல் தொடர்பு அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset