நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்களின் உரிமைகள், நலன்களை அரசு தொடர்ந்து பாதுகாக்கும்: பிரதமர் அன்வார் உறுதி

கோலாலம்பூர்:

நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாகவும் நிலையாகவும் இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, பெண்களின் உரிமைகளின் ஒவ்வொரு அம்சமும் மேலும் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான கொள்கைகள் நிறுவப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று அன்வார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பிரதமர் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

சமூகத்தை வளர்ப்பதில் பெண்கள் வகிக்கும் பங்கு மற்றும் பொறுப்பைப் பாராட்டுவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 

மேலும் சமூகத்தில் நிலையான வளர்ச்சிக்குப் பங்களிக்க பெண்களுக்கு சரியான இடம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.

போராட்டம் மிகுந்த தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து பயணிக்கும் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குப் பிரதமர் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துக் கொண்டார். 

பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் உரிமைகளுக்காக போராடவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset