நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிக செலவு காரணமாக குட்இயர் தொழிற்சாலையை மூடப்படுகிறது: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

அதிக செலவு காரணமாக குட்இயர் தொழிற்சாலையை மூடப்படுகிறது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

52 ஆண்டு பழமையான குட்இயர் தொழிற்சாலை மூடப்படும் என்ற நோட்டிஸ்  சமூக ஊடகங்களில் வைரகி உள்ளது.

இதனால்  வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தக்கவைக்க அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் இருந்து புத்ராஜெயாவைப் அமிரூடின் பாதுகாத்துள்ளார்.

குட்இயர் தனது தொழிற்சாலையை மூட முடிவு செய்த ஒரே நாடு மலேசியா அல்ல.

டயர் தயாரிப்பாளரின் வருடாந்திர அறிக்கையின் அடிப்படையில்,

குட்இயர் பல கண்டங்களில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.

2023ஆம் ஆண்டில் 500 பணியாளர்களைக் கொண்ட ஓஹியோவின் ஓக்லாண்டில் உள்ள தொழிற்சாலையை குட்இயர் மூடிவிட்டது.

தற்போது ஷாஆலமில் உள்ள தொழிற்சாலையை மூட திட்டமிட்டுள்ளது. இதற்கு அதிக செலவே காரணம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset