நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றங்களைச் செய்து, நாட்டின் கண்ணியத்தை உயர்த்துமாறு மக்களுக்கு அன்வார் அழைப்பு விடுப்பு

கோலாலம்பூர்: 

அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மட்டத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் இணைந்து செயல்பட்டு நாட்டின் கண்ணியத்தை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கும், முன்னேறுவதற்கும் மக்களுக்கும் பங்கும் பொறுப்பும் உள்ளது என்றார் அவர்.

எந்த மொழி பேசினாலும், இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில், மலேசியாவின் கண்ணியம் மற்றும் அந்தஸ்தை உயர்த்துவதில் நமது பங்கை ஒருபோதும் மறக்கக்கூடாது.

கடமையில் ஈடுபட்டு, போராடி, உலக அரங்கில் நாட்டின் பெயரைச் செதுக்கப் பாடுபடுபவர்களுக்கு, இந்த உன்னத முயற்சியைத் தொடருங்கள் என தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவை மேன்மைப்படுத்தவும், தேசத்தின் வாரிசுகளின் கொள்ளுப் பேரக்குழந்தைகளால் மரபுரிமை பெறுவதற்கு பெருமையடைவதாகவும் அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset