நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சவால்கள் உள்ளன: மிர்சான்

பெட்டாலிங் ஜெயா: 

தமக்கு எதிரான எம்ஏசிசி விசாரணை தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என்று மிர்சான் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த விஷயத்தை ஒரு சவாலாக விவரித்த முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் மகன், அனைத்து மலேசியர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று அவர் கூறினார். 

தான் நன்றாக இருப்பதாகவும் எம்ஏசிசி விசாரணையில் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று என்று விசாரணை குறித்துக் கேட்டபோது அவர் தெரிவித்தார்.

நான் மட்டுமல்ல, மலேசியாவில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சவால்களை எதிர்கொள்கிறார்கள். வாழ்க்கை என்னை ஒரு சவாலாகத் தேர்ந்தெடுக்கிறது. நான் அதை ஏற்றுக்கொண்டு சமாளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சவாலைச் சமாளிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக மிர்சான் தெரிவித்தார்.

மலேசிய லான் டென்னிஸ் சங்கத்தின் தலைவரான மிர்சான், அரசியலில் சேர விருப்பம் இல்லை என்று கூறினார்.

மிர்சான், அவரது இளைய சகோதரர் மொக்ஸானி இந்த ஆண்டின் தொடக்கத்தில்  தத்தம் சொத்துக்களை அறிவிக்க எம்ஏசிசி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset