நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதலியைக் கொன்றதாக லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம்: 

கடந்த வாரம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தனது காதலியைக் கொன்றதாக லாரி ஓட்டுநர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

37 வயதான வி.நாதன் சனிக்கிழமையன்று மாஜிஸ்திரேட் சாஷா டயானா முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு தலையசைத்தார்.

எனினும், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கொலை வழக்கு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு 10.02 மணியளவில் B-23-03 Trefoil @ Setia City, Jalan Setia Dagang AH U13/AH சேத்தியா ஆலம் என்ற இடத்தில் 32 வயதான மாவிகா லும்மை என்பவரைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு குறையாத, 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு வகை செய்யும் 
குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 12 கசையடிகள் வழங்கப்படும். 

அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூருல் ஃபரா சோஃபியா நோரஸ்மான் இந்த வழக்கைக் கையாண்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் டி.பி அரவிந்த் ஆஜரானார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

மேலும், வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கும் ரசாயன அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் ஜூன் 7-ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்தது.

பிப்ரவரி 28-ஆம் தேதி, ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் முஹம்மத் இக்பால் இப்ராஹிம் செத்தியா ஆலாமிலுள்ள ஒரு குடியிருப்பின் 23-வது மாடியிலிருந்து தனது காதலியைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்ததாகக் கூறினார்.

அந்த நபரிடம் ஏழு குற்றப் பதிவுகளும், ஒரு போதைப்பொருள் பதிவும் இருப்பது மதிப்பாய்வின் முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset