நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதல் நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்ட மசோதாவைச் சீரமைக்கும் பணி இறுதி கட்டத்திலுள்ளது: ங்கா கோர் மிங் 

பெட்டாலிங் ஜெயா: 

வீடமைப்பு மற்றும் உராட்சி துறை அமைச்சு மலேசியாவின் முதல் நகர்ப்புற மறுசீரமைப்புச் சட்ட மசோதாவை (யுஆர்ஏ) சீரமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. 

சீரமைக்கப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வீடமைப்பு மற்றும் உராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், மாநில அஅரசுகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் இது குறித்து அமர்வுகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார். 

நகர மற்றும் நாடு வளர்ச்சி திட்ட துறையின் மூலம்  நாட்டிற்கான நகர்ப்புற மறுமேம்பாட்டிற்கான முதன்மை வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் அவை கடந்தாண்டு  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்றார்.  

அமைச்சகம் பல்வேறு நிறுவனங்களுடன், குறிப்பாக சட்டத் துறை வாரியத்துடன் சட்டத்தை உருவாக்குவதற்கு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றார் அவர்.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாடு ஆகியவை மலேசியாவின் பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சி நிரலின் முக்கியமான கூறுகளாகும். குறிப்பாக தற்போதைய நகரமயமாக்கல் விகிதம் 78 சதவீதமாக உள்ளது.

இது 2040 க்குள் 84 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset