நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023ல் மலேசியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் 84 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது: பிரதமர்

கான்பெரா:

கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியாவின் வர்த்தகம் சுமார் 83.7 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது.

இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய ஆசியான் வர்த்தக பங்காளியாக மலேசியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது.

உலகளவில், மலேசியா ஆஸ்திரேலியாவின் பத்தாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் வலிமையிலிருந்து வலுவாக வளர்ந்துள்ளன.

ஹைட்ரோகார்பன்கள், நிலக்கரி, செம்பனை,  சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் போன்ற பொருட்கள் இருதரப்பு வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் மூலோபாய நலன்களின் வர்த்தகக் கூறுகளை இது சுட்டிக் காட்டுகிறது என்றார் பிரதமர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset