நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களுக்கு மஇகாவும் எம்ஐஇடியும்  அரணாக இருக்கும்: டத்தோ ராஜா சைமன்

கோலாலம்பூர்:

இந்திய மாணவர்களுக்கு மஇகாவும் எம்ஐஇடியும் தொடர்ந்து அரணாக இருக்கும்.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இதனை தெரிவித்தார்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனையில் எம்ஐஇடி, கூட்டரசு பிரதேச மஇகாவும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகபையை அன்பளிப்பாக வழங்கியது.

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

May be an image of 10 people, people studying, hospital and text

இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ராஜா,

எம்ஐஇடி எனப்படும் மாஜூ கல்வி மேம்பாட்டு வாரியம் துன் சாமிவேலுவால் தொடங்கப்பட்டது.

இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு எந்த தடையையும் எதிர்நோக்கக் கூடாது என்பது தான் எம்ஐஇடியின் நோக்கமாகும்.

அதே வேளையில் எம்ஐஇடியின் கீழ் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் கட்டப்பட்டு தற்போது அதன் வாயிலாக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர்.

தற்போது எம்ஐஇடியின் வாயிலாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் தான் இன்று இம்மாணவர்களுக்கு புத்தகபைகள் வழங்கப்படவுள்ளது.

வரும் காலங்களில் இந்திய மாணவர்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கொண்டுள்ளார். இத் திட்டங்கள் எம்ஐஇடியின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

எது எப்படியிருந்தாலும் நாட்டில் உள்ள இந்திய மாணவர்களுக்கு அரணாக மஇகாவும் எம்ஐஇடியும் விளங்கும் என்று டத்தோ ராஜா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset