நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திவேட் பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்ச வருமானம் RM4,000, அதற்கு மேல் வழங்கப்பட வேண்டும்: ஜாஹிட் ஹமிடி 

ஷா ஆலம்:

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி (TVET) பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் RM4,000 மற்றும் அதற்கு மேல் வழங்கும் வகையில் சிறப்பு சம்பளச் சட்டம் இயற்றப்படும்.

ஜூன் 2-ஆம் தேதி, தேசிய திவேட் கொள்கை தொடங்கியதற்கு ஏற்ப தொழில் துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு இருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

இதன் வாயிலாக, அமைச்சகம் மற்றும் மேற்பார்வை முகவரிடையே குழப்பம், கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க ஒரே ஒரு திவேட் அங்கீகார மையம் நிறுவப்படும் என்று அவர் கூறினார்.

சம்பள அம்சம் கருத்தில் கொள்ளப்படும். பிரீமியம் சம்பளம் என்பது குறைந்தபட்ச சம்பளத்தின் அடிப்படையில் அல்ல.

மாறாக, சம்பளம் 4,000 வெள்ளி மற்றும் அதற்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மாணவர்களைத் திவேட் நிறுவனத்தில் சேர மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்று அவர் நாடாளுமன்ற  அமர்வில் எழுந்த கேள்விக்குப் பதிலளித்தார்.

இதற்கிடையில், திவேட் திட்டமும் மூன்றாம் பருவத்திற்கு பிறகு தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று மேலும் அவர் விளக்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset