நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிந்தனை சட்டத்தின் கீழ் ஹாடியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

பெட்டாலிங் ஜெயா:

நிந்தனை சட்டம், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகிய இரு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று பிற்பகல் மத்திய பாஸ் அலுவலகத்தில் புக்கிட் அமான் விசாரணை அதிகாரிகளிடம் ஹாடி அவாங்கிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். 

இஸ்லாத்தின் மேன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் அவர் எழுதியக் கட்டுரை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் சுமார் 3.15 மணியளவில் ஹாடியிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். 

அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கும் பாஸ் கட்சியின் தலைவரான ஹாடி முழு ஒத்துழைப்பு அளித்ததாக அவரின் அரசியல் செயலாளர் ஷாஹிர் சுலைமான் தெரிவித்தார்.

நிந்தனை சட்டம் 1948, கவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 4(1) இன் படி ஹாடி விசாரிக்கப்படுவார் என்று நேற்று ஐஜிபி ரஸாருடின் தெரிவித்தார். 

முன்னதாக, KETTINGGIAN ISLAM WAJIB DIPERTAHANKAN எனும் கட்டுரையில் ஷரியா சட்டத்திற்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் மலாய் ஆட்சியாளர்கள் குறித்தும் ஹாடி கடுமையாகச் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச கழகத்தை சிறுமைப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்ட பாஸ் கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் நடவடிக்கையினால் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வருத்தம் கொள்வதாக சிலாங்கூர் அரண்மனை தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset