நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏப்ரல் முதல் மின்னணு ஓட்டுநர் பயிற்சி, சோதனை முறை (eTesting) அறிமுகப்படுத்தப்படும்: அந்தோனி லோக்

பெட்டாலிங் ஜெயா: 

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை ஏப்ரல் முதல் மின்னணு ஓட்டுநர் பயிற்சி மற்றும் சோதனை முறையை (eTesting) அறிமுகப்படுத்தவுள்ளது.

கேமராக்களைப் பயன்படுத்தி ஓட்டுநரின் கார் ஓட்டும் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும். அதனால், இனி கார் ஓட்டும் சோதனையின் போது ஓட்டுநரின் பக்கத்தில் அவரை மதிப்பீடு செய்ய ஜேபிஜே அதிகாரிகள் இருக்கும் நிலை இனி இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

கார் ஓட்டும் சோதனையின் முடிவானது அப்போதே வெளியிடப்படும். இதனால் மதிப்பீட்டு செயல்முறையின் ஒருமைப்பாடு மேம்படுத்தப்படும் என்று ஹுலு லங்காட்டில் உள்ள ஓட்டுநர் பயிற்சி கழகத்தில் eTesting செயல்முறையின் அறிமுக விழாவிற்கு பின் தெரிவித்தார். 

eTesting செயல்முறை குறித்து 2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 

இந்த eTesting செயல்முறை 2030-ஆம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதால் தற்போது கார் ஓட்டும் சோதனையில் ஈடுபடுபவர்களுக்கு முன்புள்ள சோதனை முறை அல்லது புதிய முறையைத் தேர்வு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். 

புதிய eTesting முறைக்கு ஓட்டுநர் பயிற்சி கழகம் அதிகபட்சமாக 100 வெள்ளி வசூலிக்க முடியும் என்றும் லோல் தெரிவித்தார். 

eTesting முறையைத் தேர்வு செய்யும் ஓட்டுநர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.

முதல் சோதனை நடவடிக்கையில் தேர்ச்சிப் பெறாவிட்டால் அதே நாளில் கூடுதல் கட்டணமின்றி இரண்டாவது முறை சோதனை மேற்கொள்ள முடியும்.

பகுதி II சோதனையில் தேர்ச்சி பெறாவிட்டால் ஓட்டுநர்கள் முழு சோதனையையும் மீண்டும் செய்யாமல் தேர்ச்சி பெறாத பகுதிகளை உள்ளடக்கியச் சோதனையை மட்டுமே மீண்டும் எடுக்க வேண்டும்.

eTesting முறையைச் செயல்படுத்துவது, ஓட்டுநர் சோதனை முறையின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல், தணிக்கை செயல்முறையை எளிதாக்குதல் மற்றும் மின்னணு முறையில் சோதனை நடவடிக்கைகளைக் கண்காணித்தல் ஆகியவற்றுடன் தற்போதுள்ள அல்லது கைமுறை சோதனை முறையுடன் ஒப்பிடும்போது அதிகமான ஓட்டுநர்களைச் சோதனை செய்ய முடிவதாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டார். 

தற்போது, ​​eTesting முறையை நடைமுறைப்படுத்திய மூன்று ஓட்டுநர் பயிற்சி கழகங்கள் உள்ளன.

போக்குவரத்து அமைச்சகம் அனைத்து ஓட்டுநர் நிறுவனங்களையும் eTesting அடிப்படையில் ஓட்டுநர் சோதனைகளை வழங்க ஊக்குவிக்கிறது. 

முறை சோதனையை eTesting முறைக்கு மாற்றுவதற்கு ஓட்டுநர் நிறுவனங்களுக்கு ஆறு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இதற்கிடையில், ஓட்டுநர் சோதனை விண்ணப்பதாரர்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் அதே பயிற்சி கழகத்தில் கணினி தேர்வு நடத்துவதற்கான தேர்வு மையங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்கும் என்று லோக் கூறினார்.

கணினி தேர்வும் கார் ஓட்டும் சோதனையும் ஒரே இடத்தில் செயல்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு எளிதாக இருக்கும் என்றார் அவர். 

தங்களின் பயிற்சி கழகத்தில் கணினி தேர்வை நடத்துவதற்கு சோதனை மையங்களைத் திறக்க விரும்பும் ஓட்டுநர் நிறுவனங்கள், அவர்களின் பயிற்சி கழகத்தில்  eTesting செயல்முறையை வைத்திருக்க வேண்டும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset