நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் முதலீடு செய்ய ஏழு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன

மெல்பர்ன்: 

முதலீட்டை அதிகரிக்கவும், புதிய முதலீட்டை மலேசியாவிற்கு கொண்டு வரவும் ஆஸ்திரேலிய ஏழு நிறுவனங்கள் உறுதி பூண்டுள்ளன.

தொழில்துறை தலைவர்களுடனான வட்டமேசை சந்திப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டது என்று வர்த்தகத் தொழில்துறை மற்றும் முதலீட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார். 

தற்போது ஏழு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். 

இன்று 18 நிறுவனங்கள் பிரதமரைச் சந்தித்துள்ளன. மேலும், ஆறு நிறுவனங்களுடன் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்தப்படவிருப்பதாக ஆஸ்திரேலிய தொழில்துறையின் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடனான சந்திப்பிற்கு தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஏற்கனவே உள்ள முதலீடுகளை அதிகரிப்பதுடன், புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதையும் உள்ளடக்கியது. 

முதலீட்டை இறுதி செய்யும் செயல்முறை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். 

ஆனால் மிக முக்கியமாக அவர்களை மலேசியாவில் முதலீடு செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் என்றார்.

அவர்கள் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துடன் ஒரு கூட்டத்தையும் அது தொடர்புடைய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தொழில்துறை தலைவருடனான அன்வாரின் சந்திப்பு குறித்து, தெங்கு ஜஃப்ருல், மலேசியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரதமர் தனது கருத்துக்களைத் தெரிவித்தாகக் குறிப்பிட்டார். 

சந்திப்பு நன்றாக நடந்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset