நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அபாங் இஸ்கண்டார் மலாயா கூட்டமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தற்காலிக நியமனம்

புத்ரா ஜெயா: 

கடந்த வாரம் ஜாபிடின் தியா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் மலாயா கூட்டமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் (CJM)  தற்காலிக நியமனம் நியமிக்கப்பட்டார்.

அப்பதவிக்கு நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படும் வரை   
அபாங் இஸ்கண்டார் அனைத்துக் கடமைகளையும் செயல்படுத்துவார் என்று தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் கூறினார்.

இந்தத் தற்காலிக நியமனம் குறித்த கடிதத்தின் நகல் அனைத்து நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிமன்ற அதிகாரிகளுக்கும் நேற்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

1964-ஆம் ஆண்டு நீதிமன்றச் சட்டத்தின் பிரிவு 9(3)(a) இன் கீழ் தெங்கு மைமுன் நியமனம் செய்யப்பட்டார்.

அதில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒரு காலியிடத்தின் போது மலாயா கூட்டமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தற்காலிகமாகக் கடமைகளைச் செய்யலாம் என்று கூறுகிறது.

தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவராகசும், அபாங் இஸ்கண்டார் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளார்.

ஜாபிடின் தியா பிப்ரவரி 29-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் மலாயா கூட்டமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். 

மேலும் கடந்த ஆண்டு ஜனவரியில் அந்தப் பதவிக்கபவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset