நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிலையான கட்டணத்தில் 22,000 பயண இருக்கைகள்: ஏர் ஆசியா தகவல்

கோலாலம்பூர்:  

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீபகற்ப மலேசியாவுக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான இரவு நேரப் பயணங்களுக்காக நிலையான விலையிலான 22,000 மேற்பட்ட பயண இருக்கைளை ஏர் ஆசியா ஏற்பாடு செய்துள்ளது.

பெருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக பொது மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கில் இச்சேவை வழங்கப்படுவதாக அந்தக் குறைந்த கட்டண விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பயணிகள் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், சிபு, பிந்துலு மற்றும் மிரிக்கும் ஜொகூர் பாருவிலிருந்து கூச்சிங்,சிபு அல்லது மிரி ஆகிய நகரங்களுக்கும் 298 வெள்ளி ஒருவழிப் பயணக்
கட்டணத்தில் பயணிக்க முடியும்.

அதே சமயம், கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு, சண்டாகான்,மற்றும் ஜோகூர் பாருவிலிருந்து கோத்தா கினாபாலுவுக்கு 348 வெள்ளி ஒரு வழிப்பயணக் கட்டணத்தில் பயணிக்க முடியும் என அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஆக, பயணிகள் இந்தச் சிறப்புக் கட்டணப் பயணத் திட்டத்திற்கான முன்பதிவுகளை இப்போது தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

தீபகற்ப மலேசியாவுக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையே 11 பயணத் தடங்களுக்கான 122 இரவு நேரப் பயணச் சேவை தவிர்த்து அரசாங்கத்தின் பெருநாள் கால முயற்சிகளுக்கு உதவும் நோக்கில் வழக்கமான கட்டணத்தில் வாரம் 735 பயணச் சேவைகளைத் தாங்கள் வழங்கி வருவதாகவும் ஏர் ஆசியா கூறியது.

இந்தச் சிறப்பு பயணச் சேவை கட்டுபடி விலையிலானது மட்டுமின்றி அரசாங்கத்தின் பெருநாள் காலச் சிறப்பு கட்டணத் திட்டத்திற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஏர் ஆசியா ஏவியேஷன் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி போ லிங்கம் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset