நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 ரஃபிசி என்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை: லிம் சியான் சீ

பெட்டாலிங் ஜெயா: 

பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியின் பிரதிநிதி தம்மை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று சமூக ஊடகப் பிரபலம், லிம் சியான் சீ தெரிவித்தார். 

அவர் தம்மை தொடர்புக் கொள்ள ஏன் தாமதம் என்றும் தாம் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க பல விஷயங்கள் இருப்பதாகவும் லிம் சியான் சீ குறிப்பிட்டார். 

மேலும், இந்த நேரலை அமர்வு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பிப்ரவரி 19-ஆம் தேதி ரஃபிசி யாங் பாக்கார் மந்திரி' ஒளிபரப்பில் லிம், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி மற்றும் முன்னாள் அம்னோ தகவல் பிரிவு தலைவர் இஷாம் ஜலீல் ஆகியோரை ஆடியோ விருந்தினர்களாக அழைக்க விரும்புவதாகக் கூறினார்.

இந்த நேரத்தில் 1MDB யை பாதுகாத்துப் பிரச்சாரத்தை நடத்திய கதாபாத்திரத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த விரும்புவதாகவும் ரஃபிசி கூறினார்.

இருப்பினும், அவர்களை அழைப்பதற்கு முன், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ தலைவராக இருக்கும் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி ஆகியோரின் பதிலைப் பெறுவேன் என்று ரஃபிசி கூறினார்.

லிம் உடனடியாக சவாலை ஏற்றுக்கொண்டு நேருக்கு நேர் சந்திப்பு நடத்த தயார் என்றும் தெரிவித்தார். 

இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், ரஃபிசியின் பிரதிநிதி தன்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று லிம் நேற்று கூறினார்.

அண்மையில் நடைபெற்ற பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸில் அமைச்சர் கலந்து கொண்டதால், ரஃபிசி இந்த விவகாரத்தை நேருக்கு நேர் விவாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset