நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பேரீச்சம்பழத்திற்கான 200 ரூபாய் வர்த்தக வரியை 1 ரூபாயாக குறைக்க இலங்கை அரசு முடிவு

கொழும்பு:

வரும் ரமலான் நோன்பு காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும்
பேரீச்சம் பழங்களுக்கான விசேட வர்த்தக வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பேரிச்சம்பழத்திற்கு தற்போது விதிக்கப்படும் 200 ரூபாய் விசேட வர்த்தக வரியானது 1 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கு, மத அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset