நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானின் கின்மேமை அரிசி ஒரு கிலோ 754.00-க்கு விற்பனை 

தோக்கியோ: 

ஜப்பான் நாட்டின் கின்மேமை அரிசி அதன் தரத்திற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. 

இதன் ஒரு கிலோ அரிசி 754.00 மலேசிய ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது. 

உலக அளவில் பல அரிசி வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், பாஸ்மதி மிகவும் பிரபலமானது. அதேபோல், உலக அளவில் ஒவ்வொரு வகையான அரிசி மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளது.

இந்த அரிசி வெறும் அதிகவிலைக்கு மட்டுமின்றி, அதன் பல்வேறு சிறப்பு அம்சங்களுக்காகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டிலுள்ள டோயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையை தயாரித்து வருகிறது. 

இந்த டோயோ நிறுவனம் மட்டுமே கின்மேமை அரிசிக்கு காப்புரிமையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த அரிசி சமைப்பதற்கு முன்பு கழுவ வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த கின்மேமை அரிசி சாதாரன அரிசியைவிட 1.8 மடங்கு அதிகமான ஃபைபர் மற்றும் ஏழு மடங்கு அதிகமாக வைட்டமின் பி1 சத்து இருக்கிறது என டோயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதனால், உணவு பிரியர்களும், உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்களும் இதனை அதிகப்படியாக நுகர்வுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset