நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Cathay Pacific விமான இயந்திரத்தில் தீ

விக்டோரியா: 

Cathay Pacific நிறுவனத்தின் Airbus A350 ரக விமானம் ஒன்றின் துப்புரவு நடைமுறையால் இயந்திரம் தீப்பற்றியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இம்மாதம் 2-ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து சுவிட்சர்லந்து புறப்பட்ட விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

விமானம் உடனடியாக ஹாங்காங்கிற்குத் திருப்பிவிடப்பட்டது.

Cathay Pacific நிறுவனம் அதன் Airbus A350 ரக விமானங்களைச் சோதனை செய்தது. 

சோதிக்கப்பட்ட 48 விமானங்களில் 15 விமானங்களின் பாகங்கள் மாற்றப்பட வேண்டியிருந்ததாகத் தெரியவந்தது.

இந்நிலையில், இயந்திரம் தீப்பற்றிக்கொண்டதற்கான காரணத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆகாய விபத்துப் புலனாய்வு ஆணையம் வெளியிட்டது.

விமானத்தில் எரிபொருளை மாற்றும் குழாய் ஒன்று வெடித்ததால் அதிலிருந்து எரிபொருள் கசிந்ததாகவும் இயந்திரத்தில் தீயை ஏற்படுத்தியதாகவும் அது கூறியது. 

சம்பவம் பெரும் விபரீதத்தில் முடிந்திருக்கலாம் ஆனால் தற்போது அது தவிர்க்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset