நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தங்கள் நாட்டைவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனம் ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியா புறக்கணித்தும் நிறைவேறியது

ஜெனீவா: 

காசாவில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் 12 மாதங்களில் வெளியேர வேண்டும் என்று ஐநாவில் பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 124 நாடுகளும் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

காசாவில் இஸ்ரேல் போர் தொடங்கி  ஓராண்டை நிறைவு செய்யவுள்ள நிலையில் இந்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் ஆதரவு கிடைத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாக்கெடுப்பு தொடர்பாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கூறுகையில், சுதந்திரம், நீதிக்கான எங்களின் போராட்டத்தில் காசாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அங்கிருந்து ஓராண்டுக்குள் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவு கிடைத்திருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதுவே ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது என்றார்.

இந்தத் தீர்மானத்தை பின்பற்றப் போவதில்லை என்று இஸ்ரேல் அராஜகமாகக் கூறி உள்ளது. எனினும், ஐநாவில் இந்தத் தீர்மானம் நிறைவேறியுள்ளது, உலக நாடுகளின் ஒருமித்த கருத்தாக பார்க்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset