நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை 

கொழும்பு:

அதிபர் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை அவசரப்பட்டு வெளியிடுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மாலை 4.15 மணியளவில் ஆரம்பமாகும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது, அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரியுள்ளது.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset