நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்

பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர், வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தடை விதித்துள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவுறுத்தலால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. 

இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset