நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனானில் வெடித்த கருவிகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம்

லெபனான்:

லெபனானில் வெடித்துச் சிதறிய ஆயிரக்கணக்கான pager எனப்படும் கையடக்கத் தொலைத்தொடர்புக் கருவிகள், walkie-talkie தொலைத்தொடர்புக் கருவிகளும்  வெடிக்கும் வகையில் முன்கூட்டியே மாற்றியமைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் லெபனான் கிளை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது தெரியவந்தது.
 
கருவிகள் லெபனானுக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

பின்னர் கருவிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் அவை வெடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமையும் நேற்று முன் தினமும் நடத்தப்பட்ட 2 நாள் தாக்குதலில் 37 பேர் மாண்டனர். சுமார் 3,000 பேர் காயமுற்றனர்.

கருவிகள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் பணி உலகெங்கும் தொடர்கிறது.

Pager தைவானிலிருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தைவானின் Gold Apollo நிறுவனம் அதை மறுத்துவிட்டது. 

தைவானின் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் அடங்கிய குழு ஒன்று விசாரணையில் இறங்கியுள்ளது. 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஹங்கேரியில் இருக்கும்  BAC Consulting KFT நிறுவனம் கருவிகளைத் தயாரித்திருக்கலாம் என்று Gold Apollo நிறுவனம் கூறியது. அந்த நிறுவனமும் pagerஐத் தயாரிக்கவில்லை என்று கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset