நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாவ்ல் யோங் மீதான் குற்றச்சாட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்தியது

புத்ராஜெயா:

இந்தோனேசியப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரா முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் பால் யோங்கின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யோங்கை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் போது விசாரணை நீதிபதி சரியான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனால் பாவ்ல் யோங்கின் மேல்முறையீடு தகுதியற்றது என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.

விசாரணை நீதிபதி, மேல்முறையீட்டாளரின் பாதுகாப்பு ஒரு பின் சிந்தனை, அப்பட்டமான மறுப்பு என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.கோமதி சுப்பையா, பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்கள் நம்பகமானதாக இல்லாததால் மேல்முறையீட்டை அனுமதிப்பதாகக் கூறினார்.

மேலும், யோங்கிற்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை.

ஏனெனில் அவரது சாட்சியத்தின் போது பாதிக்கப்பட்டவரின் நடத்தை மற்றும் சைகைகளை கண்காணிக்க பாதுகாப்பு அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் மூன்று பேர் கொண்ட நீதிபதி குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ஹதாரியா சையத் இஸ்மாயில் பெரும்பான்மையாக இருந்தார்.

மேலும் பெரும்பான்மையானவர்கள் யோங்கின் 13 ஆண்டு சிறைத் தண்டனையை எட்டு ஆண்டுகளாகக் குறைத்தனர். ஆனால் இரண்டு பிரம்படிகள் நிலைநிறுத்தப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset