நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகா கவிதை என்ற படைப்பை முன்னிறுத்தி கவிப்பேரரசு வைரமுத்துக்கு பெருந்தமிழ் விருது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கவிதைகளால் உலகையே ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு இத்தனை காலங்கள் அவரை முன்னிறுத்தி விருதுகள் வழங்கப்பட்டது.

ஆனால் மலேசியாவில் மகா கவிதை என்ற படைப்பை முன்னிறுத்தி அவருக்கு பெருந்தமிழ் விருது வழங்கப்படுகிறது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ்ப் பேராயமும் இணைந்து வழங்கும் சிறந்த தமிழ் நூலுக்கான பெருந்தமிழ் விருது பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதைக்கு வழங்கப்படுகிறது.

இம் மாபெரும் விழா வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பான ஐம்பூதங்களை உள்ளடக்கிய, ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு மகா கவிதை படைப்பிற்கான அங்கீகாரம் இது. 

மகா கவிதை எனும் மாபெரும் படைப்பிற்கு, அதன் தமிழுக்கு,  அந்த அறிவிற்கு விருது.

நீண்ட ஆய்வுக்குப் பின் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. 

ஜனவரி 2024இல் இந்த நூல் வெளியிடப்பட்டு உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு இருப்பு சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெரும் கவிதை நூல் இது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்  தலைமையில் கவிஞர் வைரமுத்து இந்த விருதைப் பெறவுள்ளார்.

கிட்டத்தட்ட 1,000 பேர் வரை இம் மாபெரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அழைக்கப்படுபவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இதனிடையே கல்விமான்கள் தமிழ் அறிஞர்களின் வாழ்த்துரையோடும் மதிப்புரையோடும் மகா கவிதையை பெருந்தமிழ் விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் மதியுரைஞர் குழுவிற்கு என் வணக்கம்.

விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இருவருக்கும் என் நன்றி. இந்த விருதை நான் பெரிதும் மதிக்கிறேன். 

பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம். ஆனால் இது என் ஒரு தலைக்கு மட்டுமல்ல, ஒரு தமிழ் தலைமுறையின் ஒவ்வொரு தலைக்கும் சூட்டப்படுவது என்றே கருதுகிறேன். 

மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்  என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset