நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்க: உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை

கோலாலம்பூர்:

7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக் தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் இதனை கூறினார்.

6 மாதங்களுக்கு முன்பு நகை, பொற்கொல்லர், ஜவுளி, முடித்திருத்தும் தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தொழிலாளர்கள் கிடைக்காமல் இருந்த இத்தொழில் துறையினருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்தது.

இந்த அறிவிப்பு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு விண்ணப்ப செயல்முறையின் வழிகாட்டுதல்கள் மற்றும் தேவைகளை முன்னாள் மனிதவள அமைச்சர் சிவக்குமார் அறிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த 3 தொழில் துறையில் 2,000 வர்த்தகர்கள் உள்ளனர்.

இதில் 117 வர்ததகர்கள் 377 தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 227 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7,500 அந்நியத் தொழிலாளர்களில் 227 என்பது 5 சதவீதம் தான்.

அதே வேளையில் இத் தொழிலாளர்களுக்கான விண்ணப்ப விதிமுறைகல் கடுமையாக உள்ளதால்தான் அதிகமான வர்ததகர்கள் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளனர்.

இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சரை சந்தித்து விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மனிதவள அமைச்சு, உள்நாட்டு வாணிபம் வாழ்க்கை செலவின அமைச்சுடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியதாக நிவாஸ் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset