நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.ஏ.சிசியின் விசாரணைகளில் கருத்து தெரிவிக்க வேண்டாம்; டைய்மின் வழக்கறிஞர்கள் பிரதமருக்கு அறிவுறுத்தல் 

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையோ பார்வையையோ பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஸைனுடினின் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன், சஞ்ப்ரீத் ராஜ் சிங் கேட்டுக்கொண்டனர். 

அன்வாரின் கருத்தானது டைய்ம்மிற்கு எதிரான எம்.ஏ.சிசி விசாரணையைக் குறிக்கிறது. மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க ஏன் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அன்வார் அழைக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை என்பது சுதந்திரமாகவும் எந்தவொரு அழுத்தத்தின் பேரிலும் நடக்காமல் இருப்பதையும் அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

முன்னதாக, உயர்தர மனிதர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணை செய்யும் போது ஏன் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக உள்ளனர் என்று அன்வார் கேள்வி எழுப்பியதாக தி எட்ஜ் செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டது. 

அன்வாரின் இந்த கூற்று துன் டைய்ம் ஸைனுடின் தரப்பை வெறுப்படைய செய்துள்ளதுடன் பிரதமரின் செயலையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset