நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரி செலுத்தாதவர்களைத் தேடி நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் அன்வார்

சைபர் ஜெயா: 

வரி வசூலிப்பதில் உள்நாட்டு வருமான வரி வாரியம் உறுதியாகவும் தைரியமாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். 

ஒருவரின் செல்வாக்கு மற்றும் பதவியைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

வரி செலுத்தாதவர்களைத் தேடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்நாட்டு வருமான வரி வாரியம்  பயப்பட வேண்டாம் என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார். 

தங்கள் செல்வாக்கு மற்றும் பதவி காரணமாக, அவர்கள் வரி செலுத்துவதைத் தவறவிடுகிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றார். 

ஒருவர் வரி செலுத்துகிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் வரி செலுத்த தவறியிருந்தால் அவரைத் தேடி சென்று  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். 

இதற்கு முன்னர் அமைச்சரவையில் பதவி வகித்த வரலாற்றையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 

நாட்டில் எண்ணில் அடங்காதப் பெரிய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவதையும் அவர் குறிப்பிட்டார். 

கடந்தாண்டு மட்டும் உள்நாட்டு வருமான வரி வாரிய 183.34 பில்லியன் வரியை வசூல் செய்துள்ளது. 

இது முந்தைய ஆண்டு வசூலை விட 7.8 பில்லியன் அல்லது 4.49 விழுக்காடு அதிகமாகும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset