நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் நிறுவனங்களில் 435,000 மட்டுமே வரி செலுத்துகின்றன: பிரதமர் அன்வார்

சைபர் ஜெயா: 

உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு வரி செலுத்தும் இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்த அளவில் உள்ளது. 

பதிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் நிறுவனங்களில் 435,000 நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்துகின்றன என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

அண்டை நாடுகளோடு ஒப்பிடுகையில் நாட்டில் விதிக்கப்படும் 11% விழுக்காடு வரி விகிதம் குறைவாகவே உள்ளது. 

அண்டை நாடான தாய்லாந்தில் 16.4 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும் சிங்கப்பூரில் 12.6 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 29 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வரி செலுத்துகிறார்கள். 

நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமல்லாமல், மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு மட்டும் உள்நாட்டு வருமான வரி வாரிய 183.34 பில்லியன் வரியை வசூல் செய்துள்ளது. 

இது முந்தைய ஆண்டு வசூலை விட 7.8 பில்லியன் அல்லது 4.49 விழுக்காடு அதிகமாகும். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset