நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா போக்கோக் செனாவில் வெப்ப அலையை வீசுகிறது: மெட்மலேசியா

கோலாலம்பூர்: 

கெடாவில் போக்கோக் செனா பகுதியில் மாலை 4.50 மணியளவில் இரண்டாம் நிலை வெப்ப அலை பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குத் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட தீபகற்பம் முழுவதும் 21 பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக வெப்ப அலை அளவு பதிவாகியுள்ளது.

முதல் நிலை வெப்ப அலை, அல்லது எச்சரிக்கை நிலை, குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

நாடு வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக மெட்மலேசியா முன்பு அறிவித்தது.

இதன் விளைவாக குறைவான மழைப்பொழிவு மற்றும் வறண்ட நிலை, வழக்கத்தை விட வெப்பமான வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset