நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் மதிப்புள்ள சரக்கு வரி மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு  700 மில்லியன் ரிங்கிட்டை சம்பாதிக்கும்: பிரதமர்

கோலாலம்பூர்:

உயர் மதிப்புள்ள சரக்கு வரியின் வாயிலாக ஆண்டுதோறும் 700 மில்லியன் ரிங்கிட்டைஅரசாங்கம் வருமானம் ஈட்டவுள்ளது. பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆடம்பர வரி என்று அழைக்கப்பட்ட இப் புதிய வரி தொடர்பான மசோதா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.

கடந்த 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது முதலில் இந்த வரி அறிவிக்கப்பட்டது.

மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டால் வரும் மே 1 முதல் இது நடைமுறைக்கு வரும்

தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதில் அளித்தார்.

முன்னதாக கடந்த அக்டோபரில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, இப் புதிய வரி 5% முதல் 10% வரை அமைக்கப்படும்.

குறிப்பிட்ட விலை வரம்பைத் தாண்டிய நகைகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றார் பிரதமர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset