நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 விழுக்காடு எஸ்எஸ்டி வரி தற்போது 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர் :

இன்று முதல் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி அமலுக்கு வருகின்றது. 

இதற்கு முன்னர் 6 விழுக்காடாக இருந்த எஸ்எஸ்டி வரி தர்போது 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 

உணவு மற்றும் பானங்கள், தொலைத்தொடர்பு மற்றும் பார்க்கிங் சேவைகளுக்கு இந்த வரி விதிக்கப்படாது. 

கடந்த அக்டோபரில் 2024 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப்போது புதிய எஸ்எஸ்டி விகிதம் 8 சதவீதமாக உயர்த்தப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார். 

பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கும் அதே வேளையில், நாட்டின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகஇந்த வரி கட்டண உயர்வு திகழ்கின்றது. 

இதற்கிடையில்,  தண்ணீர் மற்றும் மின் கட்டணங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த விலை உயர்வு, அரசின் வருவாயை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, மலேசியா 30 பில்லியனுக்கும் குறைவாக மட்டுமே வரி வசூலித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 11.8 சதவீத வரியுடன், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைந்த வரி வசூலிப்பவர்களில் ஒன்றாக மலேசியா உள்ளது. 

8 விழுக்காடு எஸ்எஸ்டி வரியை அமல்படுத்துவதன் மூலம் அடுத்த ஆண்டு கூடுதலாக 3 பில்லியன் வருவாய் கிடைக்கும் என நிதி அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset