நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒருவரின் சேவைக்கு வாழும் போதே அங்கீகாரம் கிடைக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

சிரம்பான்:

ஒருவரின் சேவைக்கு வாழும் போதே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் சேவைகள் மறைந்து விடும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கடந்த காலங்களில் ஒரு சின்ன விருது வாங்கினாலும் அது பெரிய அளவில் கொண்டாடப்படும்.

இக் கொண்டாட்டங்கள் அவர்கள் செய்யும் சேவைகளை போற்றுவதுடன் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் செய்யப்பட்டது.

ஆனால் இப்போது விருதுகள் பெறுவதைவிட வாங்குவது அதிகமாகி விட்டது. விருதை பெற்றால்தான் பெருமை. வாங்கினால் இல்லை.

May be an image of 7 people, barong, dais and text that says "சிரம்பா ன் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் ANJURAN PERSATUAN TAMILARSANGA SEREMBAN, NS 6 ழா ரிசெம்பிலான் ிரி செம்பிலான்"

குறிப்பாக ஒருவரின் சேவைக்கு அவர் வாழும் போதே உரிய அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும். அவர் சிறப்பு செய்யப்பட வேண்டும்.

அவ்வகையில் சிரம்பான் தமிழர் சங்கத்தின் தலைவர் தனபாலன், பன்னீர் செல்வம் வேலு, பார்த்திபன் ராஜா ஆகியோருக்கு நெகிரி செம்பிலான் ஆளுநர் பிறந்தநாளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

விருதுப் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். சமுதாயத்திற்கான அவர்களது சேவை தொடர வேண்டும்.

மேலும் ஓர் அரசு சாரா இயக்கம் சொந்த காலில் நிற்கும் சக்தியை கொண்டிருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலத்தோடு அரசு சாரா இயக்கங்களுக்கு நிதிகள் கிடைத்தது எல்லாம் முடிந்து விட்டது.

அவ்வகையில் சிரம்பான் இந்தியர் சங்கம் சொந்தமாக வருமானத்தை ஈட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அவர்களின் முயற்சியில் எனது பங்கும் இருக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset