நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடல் நலக்குறைவால் ஹாடி மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

கோலாலம்பூர்:

உடல் நலக்குறைவால் பாஸ் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ ஹாடி அவாங் இன்றைய மக்களவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை.

இதனை பாஸ் கட்சியின் பேச்சாளர் ஹாஷிம் ஜாசிம் கூறினார்.

நெஞ்சு வலி உட்பட பல உடல் நலக் குறைவால் ஹாடி பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஹாடியை நீண்ட தூரம் நடக்கக் கூடாது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் தற்போது திரெங்கானுவில் ஓய்வில் உள்ளார்.

15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதலாவது கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாதது குறித்து கேள்விகள் எழுந்தது.

இதற்கு பதிலளித்த ஹாஷிம் ஜாசிம் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset