நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அனுமதி: மாமன்னர்

கோலாலம்பூர்:

மக்களவையில் ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

சில நாடாளுமன்ற  உறுப்பினர்களின் நடத்தையைப் பார்த்து ஒருமுறை நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கே வெட்கமாக உணர்ந்தேன்.

மாமன்னரின் இந்த கூற்றைக் கேட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள மேஜையில் தட்டி ஆதரவு வழங்கினர்.

நாடாளுமன்றம் ஒரு தேசிய சட்டத்தின் கீழ் இயற்றப்படுகிறது.

எனவே அதன் உறுப்பினர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியது அபத்தமானது.

மக்களவையில் நடத்தை,  ஒழுக்கத்தை பேணுங்கள், நாகரீகமான பேச்சைப் பயன்படுத்துங்கள், மற்றவர்களை திட்டாதீர்கள்.

வரம்பு மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளேன்.

இன்னும் பிடிவாதமாக இருந்தால் 14 நாட்களுக்கு தடை செய்யலாம் என்று மாமன்னர் மீண்டும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset