நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நல்ல சிந்தனை ஆற்றலை பெருக்கிக்கொள்ள சமய கல்வியை அவசியம்: ராதாகிருஷ்ணன்

ஈப்போ:

நாம் பல நல்ல தொழில் துறைகளில் ஈடுபட்டாலும் அனைவரும் நல்ல சிந்தனை ஆற்றலை பெருக்கிக்கொள்ள சமய கல்வி அவசியம் என்று இந்து தரம்  மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை கூறினார்.

நாட்டின் ருக்குன் நெகாரா கோட்பாட்டடில் இறைவன் மீது நம்பிக்கை என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் தெய்வ  சிந்தனை  அவசியம் என்று இங்கு நடைபெற்ற இந்து நீ மகத்தானவன் என்று கருப்பொருளுடன் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில்  வலியுறுத்தப்பட்டது.

இங்குள்ள மகா மாரியம்மன் ஆலய  மண்டபத்தில் நடைபெற்ற இந்த  கருத்தரங்கில் இதில் கலத்துக் கொண்ட சமய பேச்சாளர்கள் பலர் உரையாற்றினர் .

இந்த கருதரங்கை இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், இந்து இளைஞர் இயக்கம் மற்றும் சமய சார்புடைய இயக்கங்களின் ஆதரவோடு நடைபெற்ற இதில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் இந்து மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர் 

இந்த கருத்தரங்கு இதற்கு முன்பு சிலாங்கூரில் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

அடுத்து கெடாவில் நடத்தவிருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.

இளைஞர்கள மத்தியில் சமய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவே முக்கியமாக நடத்தப்படுகிறது.

பல இன சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் இந்து இளைஞர்கள் சமயத்தின் அடிப்பை தத்துவங்களை தெரிந்து  வைத்திருக்கவேண்டிய அவசியத்தை ஏற்டுத்தவே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும் என்றார்.

இந்த நாட்டில் இஸ்லாமிய மதம் அதிகாரப்பூர்வ சமயமாக பிரகடனம் படுத்தியிருந்தாலும் பிற மத வளர்ச்சியை அரசு கட்டுபடுத்தவில்லை, அவரவர் மதங்கள், கலை கலாச்சாரம் நிலை நாட்டவும் அதரவாக இருந்து வருகிறது.

ஆகவே தங்களில் உள்ள தத்துவங்களை தெரிந்து வைத்துக் கொள்வதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset