
செய்திகள் இந்தியா
புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜக தேர்தல் நன்கொடை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புது டெல்லி:
தனியார் நிறுவனங்களை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜக தேர்தல் நன்கொடைகளைப் பெறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2018-19 முதல் 2022-23 வரையில் 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ. 335 கோடி தேர்தல் நன்கொடை அளித்துள்ளன. அந்த காலகட்டத்தில், அதே நிறுவனங்கள் அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ளன.
இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் 2018 முதல் 23 வரையில் பாஜகவுக்கு ரூ.187.58 கோடி நன்கொடை அளித்துள்ளன.
ஆனால், 2014 முதல் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெற்ற ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு எந்தவித நன்கொடையும் அளிக்கவில்லை. இந்தச் சோதனைகளுக்கு பிறகே, அவை நன்கொடை கொடுக்கத் தொடங்கியுள்ளன.
சோதனை நடைபெற்ற 4 மாதங்களில் அவற்றில் 4 நிறுவனங்கள் மொத்தம் ரூ. 9.05 கோடி வரை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன. அதுபோல, பாஜகவுக்கு ஏற்கெனவே நன்கொடை அளித்துவந்த நிறுவனங்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு நன்கொடையை பன்மடங்காக உயர்த்தி அளித்திருப்பதும் ஊடகச் செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
இது மிரட்டி பணம் பறித்த முறைகேடு வழக்கு என்பது தெளிவாகிறது என்று கடிதத்தில் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருர் மதுபான நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தவுடன் வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்திருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm