நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்

புது டெல்லி:

ஹரியாணாவில் கடந்த ஒரு வாரத்தில் இரு காவல் துறை அதிகாரிகள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ரோத்தக் மாவட்டத்தில் காவல் பணியாளர் பயிற்சி மையத்தில் பணியாற்றிய ஐஜி புரண் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயர் அதிகாரிகளின் ஜாதிய பாகுபாடால்தான் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். புரண் குமாரின் மனைவி அதே மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

புரண் குமாருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், சந்தீப் குமார் என்ற காவல் உதவி துணை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முன்பாக சந்தீப் குமார் வெளியிட்ட 6 நிமிஷ விடியோவில் உயிரிழந்த புரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

புரண் குமாரின் பெயரைப் பயன்படுத்தி அவரிடம் உதவியாளராக இருந்த தலைமைக் காவலர் சுஷீல்குமார் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுபான ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கில் சுஷீல் குமாரை கைது செய்ததில் சந்தீப் குமார் முக்கியப் பங்காற்றினார் என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset