நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வயநாடு நிலச்சரிவு: நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம் கல்நெஞ்சுடன் கடன் வசூல் செய்யும் வங்கிகள்: ஒன்றிய அரசு தோல்வி என உயர்நீதிமன்றம் கருத்து

கொச்சி: 

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிகள் கல்நெஞ்சுடன் கடன் வசூலிப்பதாகவும், கடன்களை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக அந்த மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வங்கிக் கடனை வசூலிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.

நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், ஜான் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்தது.

வங்கிகள் கல்நெஞ்சுடன் கடுமையான முறையை கடன்களை வசூலிப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் கடனை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை ஏற்க முடியாது நீதிமன்றம் தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset