நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி: 

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பிகாரில் 7.42 கோடி பேர் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்  கடந்த மாதம் வெளியிட்டது.

முதலில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 21.53 லட்சம் பேர் கூடுதலாக  சேர்க்கப்பட்டனர்; வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும்,   குழப்பத்தைத் தவிர்க்கவும் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset