
செய்திகள் இந்தியா
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
புது டெல்லி:
வரும் நவம்பர் 4 ம் தேதி நடைபெறும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.
தங்கள் கட்சியின் இருப்பை பாஜக, காங்கிரஸுக்கு தெரியவைப்பதற்கே இவ்வாறு செய்வதாகவும் அக் கட்சியின் பிகார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு கேட்டு மஜ்லீஸ் கட்சி காத்திருந்தது. எந்த பதிலும் கிடைக்காததால் தனித்து போட்டியிடப் போவதாக அக் கட்சி தெரிவித்தது.
பிகாரில் கனிசமாக உள்ள முஸ்லிம் வாக்குகளை ஒவைசி கட்சி பிரிப்பதால் பாஜகவுக்கு சாதகமாக அமைவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 100 தொகுதிகளில் அவர் போட்டியிடப்போவதாக பிகார் மாநில மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அக்தருல் இமான் கூறினார்.
பிகார் அரசியல் பல ஆண்டுகளாக பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி பற்றியதாகவே உள்ளது.
எனவே நாங்கள் மூன்றாவது மாற்று அணி அமைக்க விரும்புகிறோம். எதிர்வரும் பிஹார் தேர்தலில் சுமார் 100 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்றார். மூன்றாவது அணி தொடர்பாக ஒத்தக் கருத்து கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm